when Nayan thara vignesh sivan marriage
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். இது திரையுலகத்துக்கே தெரிந்த ஓபன் ரகசியம். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை அவர்கள் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். இருவரும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காதல் கிசுகிசுக்கள் பரவுவதையும் பொருட்டாக கருதவில்லை.


அதில் “நயன்தாரா விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. பிளாக் அன்ட் ஒயிட் கண்ணு உன்னை பார்த்தால் கலரா மாறுதே, நம்ம எப்போது இப்படி விருதுகள் வாங்கி இந்த பிள்ளை கையில் கொடுக்கப் போறோமோ” என்ற வாசகங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து குடித்தனம் நடத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நிஜமாகவே திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையென்றால் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விரைவில் அவர்கள் தங்கள் திருமணத் தேதியை விரைவில் அறிவிப்பார்கள்.
