தளபதி விஜய்யின் "மெர்சல்" படத்தின் ஆடியோ வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே 'மெர்சல்’ படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், பட தலைப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியது. பின்னர் ‘மெர்சல்’ என்றால் அசந்து போவது, வியப்பை தருவது, இன்ப அதிர்ச்சி தருவது என்று விளக்கமளிக்கப்பட்டது.

"மெர்சல்" பட ஆடியோ ரீலீஸ் எப்போது இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வந்த நிலையில் "மெர்சல்" பட ஆடியோ வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜயுடன், காஜல் அகர்வால், மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.