What would Rajini do for the people who did not voice for cinema?

போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பட்டாசுக்கு திரி கிள்ளி விட்டு காலா ஷூட்டிங்குக்கு சென்று விட்டார் ரஜினி. ஆனால் சினிமாவுக்கே ஒரு பெரிய ஆபத்தாக ஜிஎஸ்டி வரி வந்திருக்கிறது. அதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நியாயக்குரல் எழுப்புகிறது கோலிவுட்.

 ரஜினி ரசிகர்களை சந்தித்ததும் அரசியலுக்கு வருவது பற்றி ஹிண்ட் கொடுத்ததும் தான் இன்றுவரை தலைப்புசெய்தியாகி வருகின்றன.

இந்த சூழலில் தான் மத்திய அரசு திரைப்படங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது.இதனால் டிக்கெட் விலை கணிசமாக உயர்ந்து மக்கள் சினிமாவையே மறக்கும் சூழல் உருவாகும். ஏற்கனவே மக்கள் தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பதை தவிர்த்து இண்டர்னெட், டிவிடி மூலம் பார்ப்பதால் திரைத்துறையினருக்கு கடுமையான நஷ்டம். இந்த வரி விதிப்பைக் கண்டு கதிகலங்கிப்போயிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள். 

ஜிஎஸ்டியை எதிர்த்து கமல்ஹாசன் குரல் கொடுத்து விட்டார். விஷாலும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். ஆனால் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினி இதுவரை வாயே திறக்கவில்லை. ரஜினி குடும்பத்திலேயே தனுஷ் தயாரிப்பாளராக இருக்கிறார். அவரும் வாய் திறக்கவில்லை. 

இதுபற்றி பேசினால் தனது நண்பர் மோடிக்கு தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் என நினைக்கிறாரோ என்னவோ... சொந்த வீடான சினிமா பாதிப்புக்கே குரல் கொடுக்காத ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வார்? என்று விரக்தியில் பேசுகின்றனர் தமிழ் திரையுலகினர்.