நடிகை ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுத்ததில் இருந்து மீண்டும் தமிழ் படங்கள் நடிப்பதில் பிஸியாகிவிட்டார்.  இவர் நடித்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இவருக்கு இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்கிற உற்சாகம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தொடர்ந்து தரமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். இந்த வகையில் இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ள உயர்ந்த மனிதன் படத்தில், எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, இந்த படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஓகே சொல்லி விட்டதால் கண்டிப்பாக இது தரமான கதையாக இருக்கும் என உறுதியாகிவிட்டது.  எனினும் இந்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஜோதிகாவிடம் முழு கதையையும் கூறிவிட்டாலும் இது சிறந்த கதை என்பதால் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொள்வாரா மாட்டாரா என எஸ்.ஜே சூர்யா மற்றும் படக்குழுவினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.