பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனலுக்கு செல்ல கூடிய போட்டியாளர் என கருத்தப்பட்டவர்களில் அனிதாவும் ஒருவர். குறிப்பாக, அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில் எந்த குரூப்புகளிலும் சேராமல் தனது கருத்தை பல முறை தைரியமாக முன்வைத்தவர், இது பிக்பாஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திடீரென ஆரியுடன் மிகவும் ஆவேசமாக பேசியது பார்வையாளர்களுக்கு இவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது. நியாயமான விஷயத்திற்கு சண்டை போடலாம், ஆனால்... ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட காதில் வாங்காமல் தன்னை குறை சொல்வதை மட்டுமே வைத்து கொண்டு அவர் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசினார். 

இதன் காரணமாக அனிதாவின் வாக்கு விகிதம் மெல்ல மெல்ல குறைய துவங்கி, இதன் பிரதிபலிப்பாக இன்று பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேறியுள்ளார். 

 

இந்த நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய  பின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘அனைத்திற்கும் நன்றி’ என்று பதிவு ஒன்றை போட்டுள்ளார். இவருக்கு பாசிட்டிவாக சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அதற்க்கு மேல் நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.