What to do if you want to make money in cinema - Danshika
தீபாவளி நேரத்தில் மெர்சல் படத்தை வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது என்றும் சினிமாவில் பணம் இருந்தால் மட்டும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்றும் நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
நடிகை தன்ஷிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘விழித்திரு’.
இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன், விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எரிகா, தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது. அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.
அப்போது என்ன நடந்தது என்பதை நடிகை தன்ஷிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தன. மற்றப் படங்களும், எங்கள் படங்களும் கவனிக்கப்படவில்லை.
சினிமாவில் பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பது எனக்கு அப்போது புரிந்தது” என்று தன்ஷிகா வெளிப்படையாக தெரிவித்தார்.
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை பற்றி நேரடியாக குற்றம் சாட்டிய தன்ஷிகா, “நான் இப்பொழுது தைரியமா பேசவில்லை என்றால் வேறு எப்போதும் பேச முடியாது.
நான் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறேன் அங்கெல்லாம் கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை’’ என்றார்.
