நடிகை ஸ்ரீ தேவி மரணம் குறித்து முதல் முறையாக அவருடைய நினைவுகளை பற்றி  மனம் திறந்து பேசி உள்ளார் அவருடைய மகள் நடிகை ஜான்வி.

துபாய் சென்ற நடிக ஸ்ரீ தேவி, அங்குள்ள ஓட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்தார் என்ற செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து அம்மாவை இழந்து வாடி வரும் மகள் ஜான்வி தன் தாய் உடனான  நினைவுகளை பகிர்ந்து உள்ளார்

ஜான்வி நடிகையாவதை பற்றி......

ஜான்வி நடிகையாவதை நடிகை ஸ்ரீ தேவி விரும்பவில்லையாம்...ஆனால் என் தங்கை  நடிகையானால் சரி என்பார்..காரணம் நான் கொஞ்சம் அப்பாவி பொண்ணு..ஆனால் என் தங்கை அப்படி அல்ல....  என் தங்கை தைரியமாக இருப்பதால் அவள் வேண்டுமானால்  நடிகை ஆகட்டும் என்பார்

பள்ளி படிப்பு பற்றி.....

நாங்கள் எப்போதும் பெற்றோருடனே பயணம் செய்வதால்...பள்ளிக்கு ஒழுங்கா போக முடிவதில்லை.....எனவே ஒழுங்கா படித்து முடித்த பின்பு நடிகையாகலாம் என்று  இருந்தேன் என தெரிவித்து உள்ளார்.

அண்ணன் எங்களோடு வந்து விட்டார்....

போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜூன் மற்றும் அன்ஷீலா இருவரும் ஸ்ரீ தேவி மரணத்திற்கு பிறகு ஜான்வி உடன் சேர்ந்து விட்டனர். இது குறித்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். ஆனாலும் அம்மாவை இழந்த  துக்கத்திலிருந்து என்றும் என்னால் மேல வர முடியாது எனவும் தெரிவித்து உள்ளார்   ஜான்வி

துபாய் செல்வதற்கு முதல் நாள்..! தட்டி கொடுத்து தூங்க வைக்கும் ஸ்ரீ தேவி.....

அம்மா துபாய் செல்லும் முதல் நாள்... டிரஸ் எடுத்து வைப்பதில் மிகவும் பிசியாக இருந்தார்.... அன்று என்னால் தூங்க கூட முடியவில்லை..அப்போது எனக்கு தூக்கம் வரவில்லை...என்னை தூங்க வையுங்கள் என்று அம்மாவிடம் கூறினேன்...

அப்போது அவர் வேலையாக இருந்ததால், நான் தூங்க சென்று விட்டேன் இருந்த போதும்  அம்மா என் அருகில் படுத்து என்னை தட்டி கொடுத்து தூங்க வைத்தார் எனக்கூறி கண் கலங்கி உள்ளார் ஜான்வி....