சர்க்கார் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான சர்ச்சை அதிகரித்துள்ளது என கூறலாம். மேலும் பலர் சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு  ஒரு படத்தின் கதை கூட சுயமாக எழுத தெரியாத தொடர்ந்து திருட்டு கதை சர்ச்சையில் சிக்கி வருகிறார் என தங்களுடைய கருத்தை கூறி வருகிறார்கள். 

அதே வேலை  நடிகர் விஜயையும் சுயமாக கதை எழுத தெரிந்த இயக்குனர்கள் படங்களில் நடிப்பது விஜய்க்கு பிடிக்காத எனவும் கேள்விகள் நீள்கிறது. காரணம்  'தெறி', 'மெர்சல்' என தொடர்ந்து அட்லீயின் ரீமேக் கதையில் நடித்தார் என்று எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

சரி... வாங்க... சர்க்கார் பட பிரச்சனை என்ன என்பதை பார்ப்போம்!  ‘இந்தக் கதை என்னுடையது. இதை முறைப்படி திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்’ எனக் போர் கொடி தூக்கியுள்ளார் எழுத்தாளர் வருண் ராஜேந்திரன். 

யார் இவர்? 

வரும் ராஜேந்திரன்... தமிழில் வெளியான பொக்கிஷம், சுக்ரன், கலைஞர் கதை வசனம் எழுதிய பெண் சிங்கம் ஆகிய தரமான படங்களில் உதவி இயக்குநரா வேலை செய்துக்கொண்டே இயக்குனராக முயற்சித்து வந்தவர்.

இவர் தளபதி விஜய் நடிச்ச சுக்ரன் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்வதற்கு முன்பே... இந்த படத்தின் கதையை எழுதி அதற்க்கு 'செங்கோல்' என பெயர் வைத்து அதனை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறியுள்ளாராம்.  

இதற்க்கு எஸ்.ஏ.சி இந்த கதையை விஜய்யை வெச்சே பண்ணலாம், நீ அவரை மிகவும் கிளோஸ்சாக வாட்ச் பண்ணு என கூறி  சுக்ரன் படத்துல அசிஸ்டண்டா வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கார் எஸ்ஏசி. இதனால் வருணும் 'செங்கோல்' கதையை விஜய்க்கு ஏத்த மாதிரி மாற்றி  செங்கோல் என்ற தலைப்பில் திரைக்கதை, வசனமும் எழுதி முறைப்படி திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு செய்திருக்கார். 

மேலும் இந்த படத்தை எடுத்து தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடிய வருண், பல புரொடக்‌ஷன் கம்பெனி ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்கல. ஆனால் விட முயற்சியோடு தனிப்பட்ட முறையில்  நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி மகேஷ் பாபு வரைக்கும் சொல்லி ஓய்ந்து போய்விட்டார். 

இந்த கதையை சேரன் கிட்ட  சொல்லி பொக்கிஷம் படத்துலயும் வேலை செய்திருக்கார். ஆனால் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண்! 

முருகதாஸிடம் சிக்கியதா ஸ்கிரிப்ட்?

வரும் 'செங்கோல்' கதையை பலரிடம் கூறி இருந்தாலும் முருகதாஸிடம் மட்டும் கூறவே இல்லையே? பின் எப்படி அவருக்கு கிடைத்தது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அதற்கும் பதில் கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் குறித்து கூறப்படுகிறது...  அதாவது வருணின் செங்கோல் கதை பற்றி கேள்விப்பட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட தனிப்பட்ட போட்டோகிராபர் ‘நான் உங்களுக்குக் கதை சொல்ல வாய்ப்பு வாங்கித் தர்றேன்’னு சொல்லி செங்கோல் ஸ்கிரிப்ட் புக்கை வாங்கிட்டு போனதா ஒரு பேச்சு அடிபடுகிறது.  அதன் பிறகும் எதுவும் நடக்காத சமயத்துல, சசிகலாவின் சகோதரர் நடிகர் பாஸ் என்கிற பாஸ்கரன் கிட்டேயும் இந்தக்கதைப் போயிருக்கு. 

பாண்டிச்சேரியில் கதை டிஸ்கஷன் நடந்தபோதே, கட்சித் தலைமைக்குத் தெரிஞ்சு கூண்டோட கிளியர் பண்ணி இனியும் இந்த ஆசையெல்லாம் வரக் கூடாதுன்னு கடுமையா எச்சரித்து அனுப்பியிருக்காங்க” இதுகுறித்த ஒரு பதிவை தன்னுடைய முக நூல் பக்கத்திலும் பக்கவா பதிவு செய்திருக்கார் வருண் 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க “சர்கார் ஆடியோ, டீசர் வெளியான பின்னால என் செங்கோல் கதைதான் சர்கார் படத்தின் கதை என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒன்பது பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் வருண் ராஜேந்திரன். 

புகாரைத் தீர விசாரிச்ச எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ், ‘செங்கோல் கதை தான் சர்கார் கதை’ என ஒருமனதா முடிவெடுத்திருக்கார். 

ஆனால், அந்த முடிவை அதிகாரபூர்வமா அறிவிக்கவிடாமல் எழுத்தாளர்கள் சங்கத்துக்குள்ளே சில குளறு படிகள் நடந்துருப்பதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுத்திராது.  அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து வருண் ராஜேந்திரனுக்கு பாக்யராஜ் எழுத்துபூர்வமாக ஏழு பக்கக் கடிதம் கொடுத்தே விட்டாராம். 

இதனால் சட்ட ரீதியான நடவடிக்கையை வருண் ராஜேந்திரன் தொடங்கி இருப்பதா சர்கார் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதா வருண் தரப்பில் கூறப்படுது. 

மேலும் முருகதாஸைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து இந்தப் பிரச்சினை பற்றி உயர்ந்த மனிதர் ஒருவர் கேட்டிருக்கார். எழுத்துலகில் ரொம்ப மதிக்கப்படக்கூடியவர் என்பதாலும், அதிகாரத்தில் இருக்கவர் என்பதாலும் முருகதாஸ் பதில் சொல்லியிருக்காராம். ‘என் கதைக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சது நடிகர் திலகம் தான். 

அவர் வாக்கை தான் கள்ள ஓட்டு போட்டாங்க. அதில் இருந்துதான் நான் இந்தக் கதையை இன்னிக்கு ஏத்தமாதிரி மாத்தியிருக்கேன்’ என்று முருகதாஸ் கூறியதற்கு, வருண் கொடுத்த ஸ்கிரிப்ட் புக்கையும் காட்டி ‘நடிகர் திலகத்துக்கு நடந்ததுல மாற்றம் செய்த மாதிரி, இந்த ஸ்கிரிப்டுக்கும், உங்க கதைக்கும் மாற்றம் செய்திருக்கலாமே. அதெப்படி 99% ஒரே மாதிரி இருக்கு?’ என்று நேராகவே கேட்டதுடன் இரண்டிலும் இருக்கும் ‘ஒரு விரல் புரட்சி’ ஒற்றுமையையும் சுட்டிக் காட்டியிருக்கார்.