Finally Baahubali 2 released in Pakistan

இந்திய சினிமாவில் புதிய வசூல் சாதனையை நிகழ்த்திய பாகுபலி-2 ரூ.1000 தாண்டியுள்ளது, இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் சாதனையை இந்தப்படமும் நிகழ்த்தியதே இல்லை, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ தற்போது பாகிஸ்தானின் வெளியாகியுள்ளது.

‘பாகுபலி-2’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து ரசிகர்கள் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள். 

இந்தியில் ‘பாகுபலி-2’வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து இம்மியளவும் வாய்திறக்கவில்லை, அதில் ஆர்வம் காட்டவும் இல்லை. ஆனால், தற்போது உலகம் முழுவதும் இப்படம் நல்ல வசூலை நிகழ்த்தியுள்ள நிலையில் கரண் ஜோஹரே பாகிஸ்தானில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ‘பாகுபலி-2’ பாகிஸ்தானில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்திய படங்களுக்குக்கு பாகிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இந்தி மொழியில் லாகூர், கராச்சி உள்ளிட்ட இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும், பல இடங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக படம் ஓடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.