what is rating for vivegam teaser in youtube

''இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது 'நெவர் எவர் கிவ் அப்'' என அஜித் பேசிய இந்த வசனம் தான் இப்போதைய வலைதளத்தில் ட்ரெண்ட்...

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. 

குறுகிய நேரத்தில் அதிக லைக்குகள், பார்வைகள் என சாதனைகள் படைத்துள்ளது விவேகம் டீசர். யுடியூப்பில் கபாலி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2,32,000 லைக்குகளை பெற்றது. 

இந்த சாதனையை அஜீத்தின் விவேகம் டீசர் 12 மணி நேரத்திற்குள்ளேயே முறியடித்துள்ளது. அதே போல் 12 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் கபாலியின் 50 லட்சம் பார்வை சாதனையையும் விவேகம் முறியடித்துள்ளது. இதற்கு முன்னதாக 'கபாலி' 24 மணி நேரத்திலும், 'கட்டமராயுடு' டீஸர் 57 மணி நேரத்திலும், 'பைரவா' 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. 'விவேகம்' டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.