what happend for bigg boss actor shocking news

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் பிரபலங்களோடு இரண்டாவது சீசனில் கலந்துக்கொண்டுள்ள பிரபலங்களை பலர் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட பிரபல காமெடி நடிகர் சதீஷ், ஒன்று மற்றும் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பிரபலங்களை ஒப்பிட்டு ஒரு ட்விட் செய்திருந்தார். இதனை பார்த்த பலர் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளதாக கூறினர்.

இந்த நிலையில் தற்போது பரணியை போலவே சில விஷயங்களை செய்து தான் தான், அடுத்த பரணி என்று நிரூபித்துள்ளார் நடிகர் சென்ராயன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறாத சீன்களை 'மிட்நைட் மசாலா' என்று என்ற பெயரில், ஹாட் ஸ்டார் ஆப்பிள் ஒளிபரப்பி வருகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள். இதில் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், எப்படி பரணி ஓய்யாமல் நடந்துக்கொண்டே இருப்பாரோ அவரை போலவே சென்ராயனும் நடந்துக்கொண்டே இருந்தார். மேலும் பரணியையே மிஞ்சும் அளவிற்கு, "திஸ் இஸ் சேர், இட்ஸ் லைட், இட்ஸ் டேபிள், என வாயில் வந்த சொற்களையெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் வந்த ஓரிரு தினத்திலேயே இவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என அதிர்ச்சியில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.