பிரசாந்த்:

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் அவ்வப்போது ஹீரோவாக சில படங்களில் தலைகாட்டி வருகிறார். 

கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'சாகசம்' திரைப்படம் வெளியாகியது. தற்போது 50  ஆவது வயதை நெருங்கி கொண்டிருக்கும் இவர்  'ஜானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் இது இவருடைய 49 ஆவது படம் ஆகும். 

45 வயதிற்கு மேலும் இளம் ஹீரோயினுடன் தான் ஜோடி போட்டு நடிப்பேன் என இவர் பிடிவாதமாக இருப்பதால். பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இலியானா:

கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா 'நண்பன்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பார்வையை ஈர்த்தவர். ஸ்லிம் பிட் நடிகை தற்போது குண்டாகி விட்டார். மேலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க சில இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய போட்டோகிராபர் ஆண்ட்ரூசுடன் லிவிங் டூ கெதர் வாழக்கையில் இருந்து வரும் இவர் திருமணம் எல்லாம் சும்மா சமரதாயத்துக்கு தான் என நண்பர்கள் வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.

அனுஷ்கா:

ஆர்யா, பிரபாஸ் என பலருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட முன்னணி நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய வெயிட்டை கூட்டிய இவர் பின் பல்வேறு உடல் பயிற்சிகள் செய்தும் எரிய சதையை இருக்கமுடியவில்லை. 

மேலும் தற்போது, 35  வயதை இவர் தொட உள்ளதால்... இவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள் பெற்றோர். இவருக்கு ஏதோ திருமணம் நடப்பதில் தோஷம் இருப்பதாக கூறி சில கோவில்களில் பூஜைகளும் நடத்தினர். 

இந்நிலையில் அனுஸ்கா சினிமாவை விட்டு விலகி, கல்யாணம், குடும்பம், குழந்தை, குட்டின்னு, கொஞ்சம் குடும்ப வாழக்கையை துவங்க தயாராகி விட்டாராம்.