what happen julee take decision to go home?
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலியையே குறி வைத்து கொண்டு சில பிரபலங்கள் செயல் படுகின்றனர் என்பது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
அனைவரையும் கோபப்படுத்துவது போல் தான், ஜூலியும் நடந்து கொள்கிறார். இந்நிலையில் திடீர் என ஜூலி பிக் பாஸை விட்டு வெளியேறுவதாக கேமராவை பார்த்து பேசி இருந்தார். தற்போது என்ன காரணத்தால் ஜூலி இப்படி செய்தார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
ஆர்த்தி ஜூலியை பார்த்து நீ பொய்யாக நடிக்கிறாய் என கூற, திடீர் என கோபம் வந்து ஜூலியும் கத்த ஆரம்பிக்கிறார். அங்கு ஏற்கனவே தலைவலியோடு அமர்ந்திருக்கும் காயத்திரி என்ன நடந்தது என கேட்க.
ஆர்த்தி ஜூலியை திட்டியவாறு குறை கூற ஆரமித்தார். இதனால் ஆர்த்தியுடன் இணைந்து காயத்திரியும் ஜூலியை திட்டுகிறார்.
திடீர் என கடுப்பாகி அந்த இடத்தில் இருந்து எழுந்து, கேமராவை நோக்கி சென்று நான் இங்கு இருந்து இப்போதே போக வேண்டும் என் அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என அழுதவாறு கூறி தான் பேக்கிங் செய்யப்போவதாக கூறி அங்கிருந்து சென்றார்.
உடனே ஜூலியை ஓவியாவும், கணேஷ் வெங்கட்ராமும் வந்து சமாதானம் செய்தனர் இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
