நடிகர் அமிதாப் பச்சன், கல்லீரல் தொற்று காரணமாக கடந்த நான்கு தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டார். 

இந்த செய்தி காட்டு தீ போல் பரவ, பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த அமிதாபச்சன் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இவரை மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச்சென்றனர். இதனால் அமிதாப்பச்சன் உடல் நிலை சீராகிவிட்டதாக ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் தற்போது வரை, இவருடைய உடல்நிலை குறித்து எந்த ஒரு பதிலும் சொல்லாமல் குடும்பத்தினர் அமைதி காத்து வருவது பாலிவுட் திரையுலகையே, பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் அமிதாப்பச்சன் விரைவில் உடல் நலம் தேறி மீண்டும் நடிக்க வரவேண்டுமென சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அதே போல் சிலர் கோவில்களிலும் அவருடைய பெயருக்கு பிராத்தனை செய்து வரும் சம்பவங்களும்  அரங்கேறி வருகிறது.