What did Vishal do for Producers Association TR...

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்? என்று நடிகர் டி.ராஜேந்தர் நறுக்குனு கேள்வி கேட்டுள்ளார்.

நடிகர் விஷால் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதனைக் கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர் டி.ராஜேந்தர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் ஒருவர் அரசியலில் போட்டியிட்டால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு எப்படி மானியம் வழங்கும்” என்றும் கேட்டார்.

இந்த நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பட்டது. உடனே விஷால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டர். பின்னர், அவரின் ஆட்சேபனை மனு ஏற்கப்பட்டு அது விசாரிக்கப்பட்டது என்பதும் விசாரணைக்கு பிறகு விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்பதும் நினைவு கூரத்தக்கது.