பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் தன்னை, நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் செய்ய மறுப்பதாக அவருடைய காதலி சனம் ஷெட்டி, போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் தற்போது, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான  'பிக்பாஸ்' சீசன் 3 , நிகழ்ச்சியில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்களில் ஒருவர் தர்ஷன். விரைவில் இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்த தகவலை, கடந்த வாரம் தர்ஷன் ஒரு வீடியோ வெளியிட்டு உறுதி செய்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படைப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது தர்ஷனின் ரசிகர்களுக்கு அதிற்சிகொடுத்துள்ளது.

தர்ஷனை வளர்த்து விட்ட காதலி சனம் ஷெட்டியை, பிரபலமான பின் அவர் கழட்டி விட்டுவிட்டதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தனை முன்னாள் நின்று நடத்தி வைத்த, சீரியல் நடிகர் சத்யா மற்றும் பிரபல பாடகி NSK ரம்யா இருவரும், தற்போது பிரபல இணையத்தை ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில்... தர்ஷன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தர்ஷன் இருக்கும் போது நடந்த சத்யா - ரம்யா திருமண பார்ட்டியில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலருடன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

குறிப்பாக, சனம் ஷெட்டி முன்னாள் காதலரை கட்டி பிடிக்கவில்லை என்றும், நம்பர் மட்டுமே அவரிடம் கொடுத்ததாக, தர்ஷனிடமே தெரிவித்தார். சனம் ஷெட்டியின் மீது உள்ள பொஸசிவ் தான், தர்ஷனை கோவப்பட வைத்ததாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

அதே போல்... தர்ஷன் - சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் அன்று கூட அவர்கள் இருவருக்கும் சண்டை நடந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.