அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் விவேகம் திரைப்படத்தின் டீசர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கும் படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் யு டியூபில் அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

விவேகம் டீசருக்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான லைக் கிடைத்துள்ளது. இதனால், இந்திய அளவில் அதிக லைக் பெற்ற டீசர் என்ற பெருமையப் பெற்றுள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த சல்மான் கானின் டியூப் லைட் டீசரின் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

விவேகம் டீசருக்கு அடுத்து சூப்பர்ஸ்டாரின் கபாலி டீசர், இரண்டாவது இடத்தில் உள்ளது. விஜய் நடித்த தெறி பட டீசர் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது கொசுறு தகவல்.