We took 2000 photos to produce Mersel First Look Poster - Mercer cameraman ...
மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிட்டத்தட்ட 2000 புகைப்படங்கள் எடுத்தோம் என்று பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள் டிராக் என்று தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில் மெர்சல் டீசர் இன்று வெளியாகவுள்ளது. அட்லி பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன், “ஃபர்ஸ்ட் லுக்கிற்காக விஜய் மற்றும் அட்லி இருவரும் பயந்து கொண்டிருந்தனர். ஏனெனில் படத்திற்காக வெளியாகும் முதல் போஸ்டர் என்பதால், அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதில், காலை 10 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 8.30 மணிக்கு வந்து மேக்கப் எல்லாம் போட்டு படப்பிற்கு ரெடியாகியிருப்பார் விஜய்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக கிட்டத்தட்ட 2000 புகைப்படங்கள் வரை எடுக்கப்பட்டன. இதிலிருந்து 2, 3 போஸ்டர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. அதன் பிறகு காளை தனியாகவும், விஜய்யை தனியாகவும் எடுத்து, அதை ஒன்றாக இணைத்தோம். இறுதியில் மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நன்றாக வந்தது.
ரசிகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
