பள்ளிகளில் சாதிக்கயிறு கட்டிச்செல்வது தவறானது அதை உடனே தடுக்க வேண்டும் என நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கைகளில் வண்ண வண்ண நிறங்களில் கயிறுகள் கட்டுவதை பேஷனாக வைத்திருந்தனர். அவர்கள் கட்டியிருப்பது பேஷனுக்காக அல்ல சாதியை அடையாளப்படுத்துவதற்கான  சாதிக் கயிறு என்பது பிறகு மெதுவாகத்தான் தெரிந்தது, மாணவர்களுக்குள் யார்யார் எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதாக  கண்டுபிடிப்பதற்காகவும்  அவர்கள் தங்கள் கைகளில் தங்கள் சாதியை குறிக்கும் நிறங்களில் கயிறுகளைகட்டியிருந்தனர். அந்த கயிற்றின் அடிப்படையில் இவர் இவர் இன்னென்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளும் அடையாளமாக இருந்தது, பள்ளிகளில் மாணவர்கள், பேசுவது, பழகுவது, சாப்பிடுவது என எதுவாக இருந்தாலும் கையில் உள்ள கயிறை அடையாளமாக வைத்துத்தான் செய்வர்.

உதாரணத்திற்கு ஒரு குறிபிட்ட மாணவர்கள் பச்சை நிற கயிறும் ,மற்றும் சில மாணவர்கள் சிவப்பு நிற கயிறும் அணிந்திருக்கின்றனர் என எடுத்துக்கொள்வோம், அந்த பள்ளியில் ஒரு விளையாட்டுப்போட்டியோ அல்லது தகராறோ ஏற்பட்டாலும் பச்சை நிற கயிறு கட்டியிருக்கும் மாணவர்கள் எல்லோரும்  ஒர் அணியாகவும், சிவப்பு நிற கயிறு கட்டியிருக்கும் மாணவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து அந்த போட்டியில் மோதிக்கொள்வர். தங்கள் சாதி மாணவர்கள் எப்போதும் ஒரு அணியில் இருந்து மற்றொரு சாதியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக  மாணவர்கள் வைத்திருந்த அடையாளம் தான் அந்த சாதிக்கயிறுகள். மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வை ஊட்டும் வகையில் இப்படி ஒரு பிற்போக்குத்தனமான முறை மாணவர்கள் மத்தியில் இருப்பதை  உணர்ந்த  பள்ளிக்கல்வித்துறை, இது போன்ற சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும்  சாதி உணர்வை தூண்டும் இதுபோன்ற சாதிக்கயிறுகளை அணியக்கூடாது என்றும்

 பள்ளிகளில் இதை அனுமதிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளதுடன் இதை மீறும் மாணவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர்கள் அதை கண்காணிக்கவும் வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கடுமையாக உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரவித்துள்ள இயக்குனர் சசிகுமார்,பள்ளிகளில் சாதிக்கயிறு கட்டிச் செல்வது தவறான விஷயம். அதனை,  உடனடியாக தடுக்கவேண்டும். சாதி என்றால் என்னவென்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். கல்விதான் முக்கியம். பள்ளிக்குள் சாதி வரவேக்கூடாது" என அவர் கருத்து தெரிவத்துள்ளதுடன் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அவர் பாரட்டு தெரவித்துள்ளார்.