Asianet News TamilAsianet News Tamil

மெர்சல் படத்தை வெளியிட்டே தீருவோம் – துடித்துக் கொண்டிருக்கும் இணையதளங்கள்…

We release Mersel movie- weeping websites ...
We release Mersel movie- weeping websites ...
Author
First Published Oct 16, 2017, 9:42 AM IST


மெர்சல் படத்தை ஆன்லைனில் வெளியிட 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் மெர்சல். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ஆகும்.

இப்படம் அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.

படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ள இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏற்கெனே, விஷாலின் துப்பறிவாளன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.காம் மெர்சல் படத்தையும் ரிலீஸ் செய்யப் போவதாக கூறியிருக்கிறது. இதனால் 2650 இணையதளங்களை மெர்சல் குழுவினர் தீவிரமாக நோட்டம்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணையதளங்களை போக்கஸ் செய்கிறார்களாம் மெர்சல் படக்குழுவினர்.

மெர்சல் படத்தை வெளியிட்டே தீருவோம் என்று 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் துடித்து கொண்டிருக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios