இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் குமரன் உள்ளிட்டோர், சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகள் அவருடைய மரணத்தில் எழுந்து வரும் நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது சித்ராவின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஐஸ் பெட்டிக்குள் ரசிகர்கள், திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சக நடிகர், நடிகைகளாக சாந்தி வில்லியம்ஸ், சுஜிதா, ஸ்டாலின், குமரன் உள்ளிட்டோர் காலை முதலே சித்ராவின் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் குமரன் உள்ளிட்டோர், சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. அவங்க அப்பா, அம்மாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட படப்பிடிப்பில் கலகலப்பாக தான் இருந்தார். அதன் பிறகு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் அதிர்ச்சியும், கண்ணீருமாக தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 10, 2020, 2:17 PM IST