Actress Anjali : பிரபல நடிகை அஞ்சலியை தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான பாலையா, மேடையில் பலர் முன், ஆக்ரோஷமாக தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது.

ஆந்திராவில் பிறந்து தெலுங்கு திரைப்படங்கள் மூலம் தனது கலையுலக பயணத்தை துவங்கிய நடிகை தான் அஞ்சலி. தமிழில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான வெளியான "கற்றது தமிழ்"என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். கிளாமர் என்பதை தாண்டி சிறந்த குணச்சித்திர நடிகையாக அவர் பெயர் பெற்றார். 

இந்த சூழலில் தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை ஒரு திரைப்பட விழாவில், மேடையில் பலர் முன்னிலையில் தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகை அஞ்சலி, நேஹா ஷெட்டி மற்றும் விஷ்வக் சென் நடித்துள்ள "கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி" படத்தின் முன் வெளியீட்டு நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பாலையா அழைக்கப்பட்டார். 

முதல் ஆளாக ‘புஷ்பா 2’ படத்துடன் மோத ரெடியான கீர்த்தி சுரேஷ்... ரகு தாத்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சம்பவத்தன்று, சட்டென்று மேடையில் அஞ்சலியை, பாலையா தள்ளியது மேடையில் வீற்றிருந்த பலருக்கு வருத்தத்தை தந்தது. மேலும் பாலையா குடித்திருந்ததால் அப்படி அஞ்சலியிடம் நடந்துகொண்டார் என்று சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், அந்த திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட சில வீடியோகளை வெளியிட்டு, தனக்கும், நடிகர் பாலையாவிற்கும் நல்ல நட்பு இருப்பதாக கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. 

“கேங்க்ஸ் ஆஃப் கோதாவரியின் முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாலகிருஷ்ணா அவர்களும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை எப்போதும் பேணி வருகிறோம் என்பதையும், நீண்ட கால நட்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் மீண்டும் மேடையை பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையாக இருந்தது” என்று அந்த பதிவில் கூறியுள்ளார். 

Scroll to load tweet…

நெட்டிசன்கள் ரியாக்ஷன் 

ஆனால், இந்தப் பதிவுவுக்கு நெட்டிசன்கள் அளித்த பதில் கமெண்டில், "இப்போது அவரைப் நீங்கள் பாதுகாக்க நினைப்பது மிகவும் தாமதமான ஒரு முடிவு" என்று ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர் எழுதிய கமெண்டில் “இது கட்டாயபடுத்தி போட வைத்த ட்வீட், பரவாயில்லை, அப்படி எழுதுவது உங்கள் விருப்பம், ஆனால் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மற்றொருவர் எழுதிய பதிவில் "சிஸ்டத்திற்கு எதிராக நீங்கள் செல்ல முடியாது என்பது எனக்குப் புரிகிறது... ஏனென்றால், சிஸ்டம் கட்டுப்பாட்டில் இருப்பதால், நீங்கள் சிறப்பாக இருக்கத் தகுதியானவர்... நல்ல நேரம் வரும், காத்திருங்கள் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று கூறியுள்ளார். 

மகாராஜா முதல் கல்கி 2898AD வரை... ஜூன் மாதம் ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க உள்ள படங்களின் லிஸ்ட் இதோ