We celebrate this Christmas with The Rock!...

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டுவைன் ஜான்சனும் ஒருவர். இவரின் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ஜுமாஞ்சி -வெல்கம் டூ தி ஜங்கிள்.

டுவைன் ஜான்சன் நடிகராக தெரிவதற்கு முன்பே நம் எல்லாரூக்கும் WWE என்ற மல்யுத்த போட்டிகளின் மூலம் தெரிந்து உலகப் புகழ் பெற்றவர். தி ராக் என்றால் இன்னும் நன்றாக தெரியும்.

ஹாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய ராக், தற்போது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில், இவர் தற்போது நடித்துள்ள ஜுமாஞ்சி படத்தின் டிரைலர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகி உள்ளது.

ஆக்ஷன் காமெடி பேன்டஸி நிறைந்த படமாக உருவாகி உள்ள இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் அன்று தமிழில் வெளியாகும்.

ஜுமான்ஜி படம் இதற்கு முன்பே இரண்டு பாகங்களில் வந்துள்ளது. ஒரு படம் காட்டுக்குள் இருக்கும் விதவிதமான மிருகங்கள் அனைத்து ஊருக்குள் வந்து செய்யும் அட்டகாசம் பற்றியும், மற்றொரு படம் ஜகுரா என்ற பெயரில் விண்வெளியில் நடக்கும் சாகசங்கள் போன்று இருக்கும்.

ராக் நடிப்பில் வெளியாக உள்ள இந்த ஜூமான்ஜியில், ஒரு வீடியோ கேமுக்குள் சிக்கிக் கொள்ளும் நான்கு கதாபாத்திரங்களில் செய்யும் சாகசங்கள் பற்றிய கதை. வீடியோ கேம் அந்த நால்வரையும் காட்டுக்குள் அழைத்து சென்றுவிடும் அதனால் தான் இந்தப் படத்திற்கு வெல்கம் டூ தி ஜங்கிள் என்று பெயர் வைத்துள்ளனர்.