We are opposing poles - Madhavan talks about Vijay Sethupathi ...

விஜய் சேதுபதியும், நானும் படத்தில் எதிரெதிர் துருவங்கள் போல. ஆனால், படப்பிடிப்புக்கு வெளியே எப்போதும் ஜோக்கடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டுதான் இருப்போம். விஜய் சேதுபதி எனக்கு தம்பி” என்று புகழ்ந்து தள்ளினார் நடிகர் மாதவன்.

மாதவன், மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முதன் முறையாக இருவரும் “விக்ரம்-வேதா” படத்தில் மூலம் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என மாதவனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆங்கில தினசரி ஒன்றுக்கு பேட்டியளித்த மாதவன், சக நடிகரான விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். “விஜய் சேதுபதி எனக்கு தம்பி. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல. சிறந்த மனிதரும் கூட. படத்தில் நாங்கள் எதிரெதிர் துருவங்கள் போல இருப்பதாக தெரியும். ஆனால் படப்பிடிப்புக்கு வெளியே எப்போதும் ஜோக்கடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டுதான் இருப்போம்.” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தைப் பற்றி மாதவன், “நான் எந்த படம் நடிக்க ஒப்புக் கொண்டாலும், அந்த படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதன்படி நான் நடித்த படங்களில் விக்ரம்-வேதா நல்ல கதையம்சம் உள்ள படம் என கருதுகிறேன். ஒரு கெட்டவனை எதிர்க்கும் சாதாரண போலிஸ் கதாபாத்திரம் இது கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இந்த போலிஸ் கதாபாத்திரம் இருக்கும்” என்று தெரிவித்தார்.