சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் முந்தைய திரைப்படங்களின் வசூல் சாதனையை விஸ்வாசம் படம் முறியடித்துள்ளதாக தியேட்டர் நிர்வாகமே அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டின் ஆரம்பமே ஜாக் பாட் அடித்துள்ளது என்று தான் சொல்லணும், ஆமாம், அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் சக்கப்போது போட்டு வருகிறது. அதுவும் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் விஸ்வாசம் படத்திற்கு தமிழகம் முழுவதுமே தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், விஸ்வாசம் லோக்கல் தியேட்டர்களிலும், வெளிநாட்டிலும் 70% முதல் 80% வரை கூட்டம் வந்துகொண்டிருக்கின்றன என தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ 150 கோடிகளை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Scroll to load tweet…

மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் "விஸ்வாசம்" சென்னை தாம்பரத்தில் உள்ள வித்யா தியேட்டரில் இதுவரை 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். அதிலும் முந்தய படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்து விட்டதாம். இன்னும் வரப்போகும் நாட்களில் புதிய சாதனைகளை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது.