we agree that vivegam teaser is mass

"நெவர் எவர் கிவ் அப்'' என அஜித் பேசிய இந்த வசனத்தை நெவர் எவர் கிவ் அப்'' 'வீ அக்ரி' என இந்தியாவின் யூடியூப் தளம் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தல' அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர் நேற்று அதிகாலை வெளியாகி பல சாதனைகளை செய்து வருகின்றது. தற்போது வரை 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் டுவிட்டரில் இந்தியாவின் யூடியூப் தளம் விவேகம் டீசருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி “Never, ever, give up.” We agree… என கூறியுள்ளனர், இதை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…

அதுமட்டுமல்ல, உலகின் முன்னணி பத்திரிகை ஒன்றும் 'விவேகம்' டீசர் குறித்து சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது. இதில் முந்தைய சாதனை டீஸராக இருந்த 'கபாலி' சாதனையை விவேகம் முறியடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும், அஜித்க்கு இது 57-வது திரைப்படம் என்பதால், டீசரின் அளவும் 57 நொடிகள் தான். டீசர் வெளியாகி அரை மணி நேரத்தில் 30,000 வியூஸ் வந்ததைவைத்து, விவேகத்தின் வைரல் ரேட் அளவிட முடிகிறது இப்போது வரை யூடியூபை அலறவிட்டுக்கொண்டிருக்கிறது.