பேட்ட, விஸ்வாசம் படங்களின் மோதல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில் பேட்ட படம் வெளியாகும் முன்பே விஸ்வாசம் படம் வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பேட்ட, விஸ்வாசம் படங்களின் மோதல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில் பேட்ட படம் வெளியாகும் முன்பே விஸ்வாசம் படம் வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஸ்வாசம் வெளியாக உள்ள அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் ரிலீசாக இருப்பதால் எந்த படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பங்கள் ஏற்பட்டன. போஸ்டர், ட்ரெய்லர் என இருபடங்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி விஸ்வாசம் படத்தை நள்ளிரவு 1 மணி காட்சிக்கே ரிலீஸ் செய்ய படக்குழுவினர் அரசிடம் இருந்து அனுமதி வாங்கி இருக்கின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எந்தெந்த தியேட்டர்களில் 1 மணி காட்சிகள் என்ற தகவல்கள் முறைப்படி விரைவில் வெளியாக இருக்கிறது.