’ஆடை’ படத்துல அமலா பால் மட்டுமில்ல நானும்தான் நடிச்சிருக்கேன். என்னையும் கொஞ்சம் கண்டுக்கோங்க பாஸ்’என்று ட்விட்டரில் பதிவு  போட்ட  டிவி நடிகையை ‘நீங்களாவது ட்ரெஸ் போட்டு நடிச்சிருக்கீங்களா? என்று அவரது ஃபாலோயர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கடந்த 4 தினங்களாக சினிமா செய்திகள் அதிக ஹிட்டுகள் பெற்று வருவது அமலா பால் ஆடையில்லாமல் நடித்த ‘ஆடை’பட செய்திகள் மட்டுமே. ஊடகங்களில் அமலா பாலின் ஆடையில்லாத ‘ஆடை’ டீஸர் ரிலீஸான பிறகு அவர் ஆடையில்லாமல் எத்தனை நாட்கள் நடித்தார். எந்த லொகேஷனில் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர். படம் சென்சாருக்குப் போனபோது எவ்வளவு நீளத்துக்கு ஆடையில்லாமல் இருந்தார். அதில் எவ்வளவு வெட்டப்பட்டது ????என்று ஏகப்பட்ட விபரங்கள் வரிசையாக வந்துகொண்டேயிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் தானும் நடித்துள்ளதாக பிரபல வி ஜே ரம்யா ட்வீட் செய்திருந்தார். இவர் மணிரத்னத்தின் ‘ஓ.கே. கண்மணி’படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து சமீபத்தில் ரிலீஸான டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ படம் வரை அவ்வப்போது வெள்ளித்திரையிலும் தலைகாட்டி வருகிறார். ’ஆடை’படத்தில் தானும் நடித்திருப்பதாக ரம்யா போட்டிருக்கும் ட்விட்டைக் கண்டு ‘நீங்களாவது ட்ரெஸ் போட்டு நடிச்சிருக்கீங்களா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள் ரம்யாவின் ஃபாலோயர்கள்.