விஜய் டிவி தொலைக்காட்சியில், முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் விஜே ரம்யா. தற்போது, பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான ஒரே வருடத்தில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். திருமணத்தை தொடர்ந்தும், இவர் விஜே பணியில் கவனம் செலுத்தியதால் தான் விவாகரத்து ஆனதாக பல செய்திகள் உலா வந்த போதும், இதுவரை ரம்யா, தன்னுடைய விவாகரத்து பற்றி வெளியில் கூறியதே இல்லை.

இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தொகுப்பாளர் உங்களுக்கு மறுப்பான மணமகன் வேண்டுமா அல்லது, வெள்ளையான மணமகன் வேண்டுமா என கேட்க, அதற்கு தனக்கு நிறம் பற்றி எந்த கவலையும் இல்லை. நல்ல மனிதராக மட்டும் இருந்தால் போதும் என கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிலை வைத்து, தற்போது ரம்யா மனதளவில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். உண்மை எது என்று ரம்யா தான் சொல்லவேண்டும்.