vj manimegalai loversday special
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் காதலர் தினத்தை படு ஜோராக கொண்டாடியுள்ளார்.
காதலர் தினம்
வருடந்தோறும் பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.அதன் படி நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடினர்.ஆள் இல்லாத சிங்கிள்சோ வயிற்றெரிச்சலுடன் நேற்றைய தினத்தை கடத்தினர்.இப்படியும் மகிழ்ச்சியும் ஒரு பக்கம் சோகமுமாக காதலர் தினம் கடந்து சென்றது.
பதிவுத்திருமணம்
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தமது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி தமது காதலரான ஹுசைன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.
கேக், மோதிரம்
திருமணத்திற்கு பிறகும் வரும் முதல் காதலர் தினத்தன்று ஹுசைன் மணிமேகலையை தனது காதலால் கிறங்கடித்தது விட்டார். ஸ்பெஷல் கேக்,மோதிரம் என கொடுத்து அசத்தி விட்டார்.
கண்ணு பட போகுது
காதலர் தினத்தன்று தனது கணவர் வாங்கி கொடுத்த மோதிரம் கேக் என அனைத்தையும் டிவிட்டரில் பதிவிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தயுள்ளார் மணிமேகலை.
மணிமேகலையின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சூப்பர் மோதிரம் கண்ணு போட போகுது சுத்தி போடுங்க என்று பதிவிட்டுள்ளனர்.
