பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே மணிமேகலை, கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூர் சென்ற அவர் மீண்டும் சென்னைக்குள் வர முடியாத நிலை உள்ளது. தன்னுடைய தற்போது நிலை குறித்து ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக புதிய ட்விட் ஒன்றை அவர் போட்டு புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும், தனியார் தொலைக்காட்சி மூலம், தொகுப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர், மணிமேகலை.

ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகி, தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, வெளியூருக்கு சென்றுள்ளார்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸின் பீதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை என அணைத்து பகுதியிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் ஊருக்குள் மீண்டும் வரமுடியாத சூழல் உள்ளது.

எனவே, தன்னுடன் வந்த குழுவினருடன் கிராமம் ஒன்றில் உள்ள குடிசையில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறி, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய நிலையை தெரிவித்துள்ளார்.