vj divyadharshini about the first love
திவ்ய தர்ஷினி:
பிரபல தொகுப்பாளினி டிடி, தற்போது தொகுப்பாளர் என்பதை தாண்டி, திரைப்படம், ஆல்பம் பாடல்களில் நடிப்பது என தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் வருகிறதாம். ஆனால் தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாப்பாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என கறாராக கூறி வருகிறார் டிடி. 
டிடி ஆல்பம் பாடல்;
இந்நிலையில் காதலர் தினத்தன்று, டிடி முதன்முதலாக நடித்த காதல் ஆல்பம் வெளியானது. இந்த பாடலை கௌதம் மேனன் தயாரிக்க, பாடகர் கார்த்திக் இசையமைத்திருந்தார். காதலருடன் மிகவும் நெருக்கமாக டிடி இந்த ஆல்பத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் சிலருக்கு அதிர்சியாக இருந்தாலும், இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் காதல்:
இந்த பாடலில் நடித்த அனுபவங்கள் குறித்து டிடி மற்றும் கௌதம் மேனன் இருவரும் ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டனர்.

அப்போது டிடியிடம் தொகுப்பாளர் அவருடைய முதல் காதல் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு டிடி தனக்கு காதல் அனுபவம் இல்லை, ஆனால் கிரஷ் இருந்திருக்கிறது மற்றபடி மிகவும் சீரியஸான காதல் எதுவும் இல்லை என்று சிரித்துக்கொண்டே வெட்கத்தோடு பதில் கொடுத்தார்.
