வி.ஜே திவ்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் பாடகியாக நன்கு அறியப்பட்டவர் . ஸ்டார் விஜய்யில் ஓரிரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில்  ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.கடந்த வருடம் தனது நண்பர் ஷிபு தினகரனை திருமணம் செய்து கொண்டு பாரிஸ் நகரில் செட்டிலானார். 

சமீபத்தில் தனக்கு நேர்ந்த திகில் அனுபவம் குறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரிஸ் நகரில் ரயில் நிலையத்தில் திவ்யாவின் லேப் டாப், ஐ போன், விலையுயர்ந்த ஆடைகள், பணம் அடங்கிய பையை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். அந்த திருட்டில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களையும் இழந்துள்ளனர். 

அங்கிருந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது அவர்கள் எங்களுடைய புகாரை கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் உடனடியாக சி.சி.டி.வி காட்சிகளை பார்த்து திருடர்களைப் பிடிக்கச் சொன்னபோது, நக்கலாக சிரித்தார்களே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தன்னையும் கணவனையும் ‘தீண்டத்தகாதவர்கள்’, ‘பேச்சற்றவர்கள்’ போலவும் நடத்தினார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இனவெறி தாக்குதல் குறித்த பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில்  திவ்யாவின் இந்த பதிவு ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.