பிரபல தொகுப்பாளினி ஒருவர் சோசியல் மீடியாவில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார். 

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அஞ்சனா. இவரின் துறு, துறு பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை ஏற்க மறுத்து திருமணம் ஆகும் வரை தொகுப்பாளராகவே இருந்தார். இந்நிலையில் இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான, சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் அஞ்சனா, விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். திருமணமாகி, குழந்தைக்கு அம்மாவான பிறகும் அழகில் மிளிரும் அஞ்சனாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவிக்கிறது. நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக இன்னும் சிக்கென அழகுடன் மிளிருகிறார் அஞ்சனா. 

தற்போது எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளிப்பது சாதாராண விஷயமாகிவிட்டது. அதற்காக ஒரு ஹேஷ்டேக்கை கிரியேட் செய்யும் பிரபலங்கள், அதில் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என அறிவித்துவிடுகின்றனர். 

ஆனால் அதில் தேவையில்லாமல் கேவலமான கேள்விகளை கேட்பவர்களே அதிகம். அப்படித்தான் விஜே அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் உங்களது மார்பு அளவு என்ன என வக்கிரமாக கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியை புறக்காணிக்காமல், நிலக்கடலை அளவு இருக்குற உங்க மூளையை விட பெரிசு என துணிச்சலாக பதிலளித்துள்ளார்.