Vivek who went back to the opening ceremony and went back to see Shivaji ...
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவிற்கு வந்த விவேக், கூட்ட நெரிசலால் அரங்குக்கு உள்ளே செல்ல முடியாமல் திரும்பிச் சென்றதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா நேற்று சென்னை அடையாறில் நடைப்பெற்றது.
மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல், ரஜினி, பிரபு உள்ளிட்ட திரை உலகத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மணிமண்டப அரங்குக்கு செல்ல முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.
அவர், “மணிமண்டப திறப்பு விழாவில் கூட்டமும் பெரும் நெரிசலும் இருந்ததால் உள்ளேச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் நடிகர் திலகம் எப்போதும் நம் இதயத்தில் இருக்கிறார்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
