vivek talk about actor mayilsamy
மயில்சாமியை
மயில்சாமியை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. காமெடி படங்களில் வடசென்னை பாஷை பேசி மக்களை கவர்ந்தவர். காமெடி டைம் மூலம் சின்னத்திரையிலும் கலக்கினார். காமெடி நடிகராக மட்டுமில்லாமல் சமூக நல விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
பிளாக் அண்ட் ஒயிட்
சமீபத்தில் சினிமா பட விழா ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விவேக் நடிகர் மயில்சாமி பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மயில்சாமி பிளாக் அண்ட் ஒயிட் படங்களிலிருந்து நடித்து வருகிறார்.
வெற்றி
பிளாட் பார்மில் கூட படுத்திருக்கிறார்.அவரது வாழ்க்கையை படமாக எடுக்கலாம்.அவரின் வெற்றி பல நண்பர்களை சம்பாதித்தது.அவரின் வீட்டின் வெளியே நல்லவன் வாழ்வான் என்ற வாசகம் எழுதியிருக்கும் என்று கூறினார்.
உதவி
மயில்சாமி நல்லவனா இளிச்சவாயனா என தோன்றும்.அதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஒருநாள் பணக்காரனாக இருந்தால் ஒரு நாள் ஏழையாக இருப்பான் சீரடி சாயிபாபா போல. நல்ல மனிதன் உடனே உதவி செய்து விட்டு வெறும் ஆளாக நிற்பான் என்று கூறினார்.
