vivek obrai challenge for fans
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவதால் படக்குழுவினர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தில் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு பல்கேரியாவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பனிகள் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் ஒரு நீச்சல் குளம் இருப்பதையும் விவேக் ஓபராய் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இந்த கடுமையான குளிரில் நீச்சல் குளத்தில் குளிக்கும் தைரியம் யாருக்காவது உண்டா? என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் சவால் விட்டுள்ளார். மேலும் இந்த பனிப்பிரதேசத்திலும் படப்பிடிப்பு படுவேகத்துடன் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
