சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என எனக்கூறி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே என்று தெரிவித்தார். 

கமல்ஹாசனின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய் "அன்புள்ள கமல் மிகப்பெரிய நடிகரான கமலுக்கு மிகச்சிறிய நடிகரின் கேள்வி, தீவிரவாதியை இந்து என குறிப்பாக சுட்டி காட்டியுள்ளது ஏன்? நாட்டை துண்டாட வேண்டாம். கலைக்கு மதம் இல்லாத போது தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் என்பதால் இவ்வாறு பேசியுள்ளீரா? நாம் அனைவரும் ஒன்றே. தயதுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்" என விவேக் ஓபராய் கேட்டுக்கொண்டுள்ளார்.