vivek obarai talks about tamil cinema

தமிழகம் எனக்கு தாய் வீடு, தமிழ் படத்தில் நடிப்பதை பெருமையாகவும் தாய் மொழியில் நடிப்பதை போல உணர்கிறேன் என விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் கூறியுள்ளார். 

வீரம், வேதாளம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக சிவா அஜீத் கூட்டணியில் உருவாகிவரும் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விவேக் ஓபராய், நாயகிகளாக காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகின்றனர்.

இது குறித்து விவேக் ஓபராய் கூறியது; தமிழகம் எனக்கு தாய் வீடு போல. தமிழ் படத்தில் நடிப்பதை பெருமையாகவும் தாய் மொழியில் நடிப்பதை போலவும் உணர்கிறேன். அஜீத்தை ஷூட்டிங்கில் அண்ணா என்றுதான் அழைப்பேன். 

அவர் ரொம்பவே கூல் டைப். மிகவும் நட்பாக பழகுவார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. இந்த படத்தில் வித்தியாசமான வேடம் ஏற்கிறேன். 

நான் நடித்துள்ளது வில்லன் வேடமா? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இதற்காக அஜீத் ரசிகர்களுக்கும் எனது குடும்பமான தமிழர்களுக்கும் நன்றி சொல்கிறேன் என பெருமையா பேசியுள்ளார். மேலும், இறுதிக்கட்ட பணியில் உள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகிறது.