viveham movie loss distributor open talk

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் மூன்றாவது முறையாக நடித்து விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வியாழக்கிழமையன்று வெளியான திரைப்படம் விவேகம். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

மேலும் கோலிவுட்டில், முதல் முறையாக அக்ஷராஹாசன் இந்த திரைப்படம் மூலம் அறிமுகம் கொடுத்தார், அதே போல் பல வருடம் சென்று பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக படக்குழுவினர் மற்றும் அஜித் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஐரோப்பா நாட்டில் படப்பிடிப்பை நடத்தினர். மேலும் அதிகமான உழைப்பு, தொழில்நுட்ப விஷயங்கள் என அனைத்து விஷயங்களிலும் ஹாலிவுட் தரத்திற்கு படத்தை மெருகேற்றி இருந்தனர். 

அதே போல் படமும் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வரை வசூலித்ததாக ஊடகங்களில் செய்திகள் எல்லாம் பரவியது.

இந்நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஸ்ரீதர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மாபெரும் எதிர்பார்ப்புகிடையே வெளியான விவேகம் திரைப்படத்தால் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என்றும், விவேகம் நல்ல படம் என்றாலும் வசூல் ரீதியாக லாபம் தரவில்லை. 

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு படத்தால் 40% முதல் 50% நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அஜித் மற்றும் பட தயாரிப்பாளர்கள் இந்த இழப்பீடை ஈடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.