viveham movie ajith name relesed
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கும் என கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகிறார் இயக்குனர் சிவா. நேற்று நள்ளிரவு வெளியான அஜித்தின் ஸ்டில் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் சர்வதேச இண்டலிஜெண்ட் அதிகாரியாக நடித்து வரும் அஜித்தின் கேரக்டரின் பெயர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'விவேக்' என்பதுதான் அஜித் கேரக்டரின் பெயர் என்று கூறப்படுகிறது. அஜித்தின் கேரக்டர் பெயருக்கும், இந்த படத்தின் டைட்டிலுக்கும் ஒற்றுமை உள்ளது, அதே போல இந்த படத்தில் விவேக் ஓப்ராய் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
