'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்திருக்கும் படம் 'விவேகம்'. இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

'சர்வைவா', 'தலை விடுதலை' போன்ற பாடல்கள், சாவன் மற்றும் யூடியூப் தளங்களில் அதிக வியூஸ் பெற்றன.
பல நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர்  தற்போது வெளியாகியிருக்கிறது. அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாராகியிருக்கிறது எனச் சொல்கிறது படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் 'விவேகம்' ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில் விவேகம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே எக்கச்சக்கமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி வெளியாகி 8 மணி நேரத்தில் தெறி பட ட்ரெய்லரின் 1.5 வருட யூட்யுப் லைக்ஸ் சாதனையை முறியடித்துள்ளது.

இதனை அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு ஷேர் செய்து வருகின்றனர்.