Vivegam teaser Ajith debuts new avatar sends records toppling
அஜித் என்ற மூன்று எழுத்து மந்திரம் இந்தியா மட்டும் இல்லை உலகில் பல் வேறு இடங்களில் பேசப்படும் தாரகமந்திரம் என்று தான் சொல்லணும் வேதாளம் படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஒன்றைவருடம் படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது ரிலீஸ் ஆன "விவேகம்" படத்துன் டிசர் பட்டிதொட்டி முதல் அயல்நாடுகள் வரை மிகவும் கவர்ந்துள்ளது என்றால் மிகையாகது.
திரையுலகில் லேட்டஸ்ட்டாக வெளியான அஜித்தின் விவேகம் டீஸர் இதுவரை யாராலும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.இது மிகப் பெரிய சுனாமியாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.

அதுஎன்னவென்றால் உலகில் சினமாவே இல்லாத நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. சில நாட்களுக்கு முன்னர் வெளியான விவேகம் டீஸர் சவூதி அரேபியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதுவரை இந்த சாதனையை எந்தவொரு படமும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூபில் 99 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் 3.36 லட்சத்திற்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. வெகுவிரைவில் இந்த டீஸர் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சிய பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர், அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பதற்கு சிவாவின் இயக்கமும், அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், வசனங்கள், அனிருத்தின் பின்னணி இசை, ருபனின் எடிட்டிங் என விவேகம் பட கூட்டணியின் பிரம்மாண்டமே காரணம் என்று கூறுகிறார்கள்.
