Vivegam producer Waiting for Thala Ajith permission
நடிகர் அஜித்தின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "வேதாளம்'' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி விருந்தாக வெளிவந்தது.
அதன் பிறகு ஓராண்டுக்கு மேலாக அஜித்தின் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களை உற்சாகமிழக்கச் செய்தது.
இதற்கிடையில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விவேகம் படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ‘விவேகம்’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் தரப்பினர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸரை தயார் செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.
அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியானால் சமூக வலைதளங்களை தெறிக்கவிடக் காத்திருக்கின்றனர் தல ரசிகர்கள். ஆனால், டீஸரை அஜித் பார்த்துவிட்டு ஓகே சொன்ன பிறகு வெளியிடலாம் என படக்குழு காத்திருக்கின்றனர்.
