vivegam got Another achievement of wisdom
கோலிவுட் திரையுலகில் தனக்கென எண்ணற்ற ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் ஒவ்வொரு படத்தின் ரீலீஸின் போதும் ரசிகர்கள், ஆட்டம், பாட்டம், வெடி, பாலபிஷேகம் என தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் அன்று திருவிழா போல் தான் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில், வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற விவேகம் திரைப்படம் தற்போது மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.
இந்த திரைப்படம் நேற்றைய தினம், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்தில் 5.48 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதுவரை எந்த ஹிந்தி டப்பிங் படங்களும் செய்யாத சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போதுவரை 1 லட்சம் லைக்ஸ்களை பெற்று, 9 மில்லியன் பார்வையாளர்கள் 'விவேகம்' திரைப்படத்தை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
