vivegam film business is touching the sky

நேற்று முன்தினம் சிவா இயக்கும் அஜித்தின் விவேகம் பட டீசர் வெளியானது. இது நள்ளிரவில் வெளியானபோதும் இணைய தளங்களில் வைரலாகியது, ஏற்கனவே வெளியான தென்னிந்திய படங்களின் ஒட்டுமொத்த சாதனைகளையும் வெறும் 12 மணி நேரத்தில் முறியடித்துள்ளது. 

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கெரியாவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது அஜித் தான், அஜித் ஆகிய கடைசி மூன்று திரைப்படங்களும் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. 

வேதாளம் திரைப்படத்துக்குப் பிறகு அஜித், சிவா கூட்டணியில் மூன்றாவது திரைப்படம் விவேகம், இப்படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவர இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க பல்கேரியாவில் படமாக்கப்பட்டுள்ள விவேகம் திரைப்படத்தின் டீசர் முன்தினம் வெளியாகி யூடியூப் முதற்கொண்டு டிரெண்டாகி முந்தைய ரெகார்டுகளை முறியடித்துள்ளது. 

மேலும், யூடியூபின் டாப் 10 டிரெண்டிங்கில் விவேகம் 79 லட்சம் பார்வையாளர்களுடன் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கிறது. டீசர் வெளியாகி கிட்டத்தட்ட 48 மணி நேரங்கள் வரை டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரங்களும் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் விவேகம் திரைப்படத்தின் உரிமையை வாங்க அனைவரும் விலைபேசத் தொடங்கிவிட்டனர். விவேகம் திரைப்படத்துக்கு இப்போது பேசப்பட்டிருக்கும் விலை ரூ.55 கோடி. அதாவது பாகுபலி 2 வியாபாரத்தை டீசருக்கே ஓவர்டேக் செய்துவிட்டது விவேகம்.

பாகுபலி 2 திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர் சோபு ரூ.37 கோடிக்கு கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜனிடம் விற்றார். ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் சரவணன், ராஜராஜனிடமிருந்து ரூ.47 கோடிக்கு வாங்கி மேற்கொண்டு லாபம் வைத்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் ரூ.52 கோடிக்கு விற்றது தான் வியாபாரக் கணக்கு. 

இந்தப்படத்தின் மூலம் வந்த வசூல் எவ்வளவு என்பதை யாரும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் இதுதான் வியாபாரக்கணக்கு.