‘வேதாளம்’ படத்தின் வசூலை விவேகம் படத்தின் வசூல் முறியடித்துள்ளது.

அஜீத் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேதாளம்’ படம் தான் முதலிடத்தில் இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 120 கோடி ரூபாய்.

அந்த வசூலை ‘விவேகம்’ படம் ஒரே வாரத்தில் முறியடித்துள்ளது.

’விவேகம்‘ படம் கடந்த வாரம் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஒருவார முடிவில் இதுவரை 125 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை 64 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு ஏரியாவில் லாபத்தைத் தர குறைந்தது 25 கோடியாவது இன்னும் வசூலிக்க வேண்டுமாம்.

அதே சமயம், மற்ற மாநிலங்களில் இப்படம் லாபத்தைக் கொடுத்து வருகிறதாம். கர்நாடக மாநிலத்தின் வினியோக உரிமை சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. வசூல் ஒரு வாரத்தில் 10 கோடியைக் கடந்துள்ளது.

தெலுங்கு உரிமை சுமார் 4 கோடிக்கு விற்கப்பட்டு வசூல் 7 கோடியைத் தாண்டியுள்ளது.

கேரளாவில் சுமார் 3 கோடிக்கு விற்கப்பட்ட படம் 4.5 கோடி வசூலித்துள்ளது.

படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலித்ததே ‘விவேகம்; படத்திற்கு சாதனைதான்.