வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நடிகர் அஜித்தை தொடர்ந்து இயக்கி வருபவர் சிவா. அதுவும் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரையரங்குகளில் பெண்கள், குழந்தைகள் என கூட்டம் அலை மோதுகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அஜித் சிகரெட் பிடிக்கல… தண்ணி அடிக்கல… பெண்களை கிண்டல் பண்ணல… படத்தில் சிறிதளவு கூட ஆபாசமில்லை… ஏன் திரையில் அஜித் பைக் ஓட்டும் காட்சியில் கூட ஹெல்மெட் அணிந்துதான் நடித்துள்ளார்.

இப்படி  டீசண்ட்டா ஒரு படம் சமீபத்தில் வந்ததில்லை என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் ஒரு காட்சியைக் கண்ட ரசிகர்கள் வெகு நேரம் கைதட்டி ஆரவாரம் செய்து வருகிறார்களாம்.

தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகு நேரமான சீன் என்ன தெரியுமா? .வில்லனோட அடியாட்கள் அஜித்தின்  மகளைத் துரத்த மகள் அம்மாவுக்கு போன் பண்ணி லைவ் கமெண்ட்ரி கொடுக்கும் காட்சி தான்.

அப்போது அம்மா, ,வெள்ளை சட்டை போட்டுட்டு பைக்ல ஒருத்தர் வர்றார் பாரு… , இனி அவரு பாத்துக்குவாரு, பயப்படாதே என்று கூறும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தில் தியேட்டரே அதிர்கிறது. இது ஒன்றே விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றிக்கு சாட்சி என்கின்றனர் அஜித் தசிகர்கள்.