Asianet News TamilAsianet News Tamil

ஓவர் நைட்டில் ‘பேட்ட’யை பின்னுக்குத்தள்ளி இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘விஸ்வாசம்’

இதற்காகவே அஜீத் ரசிகர்கள் கொத்துக்கொத்தாக ரூம் போட்டு வெயிட்டிங்கில் இருப்பதாகவும் ‘பேட்ட’ படம் 24 மணி நேரத்தில் சாதித்ததை தாங்கள் 12 மணி நேரத்தில் சாதிக்க சபதம் எடுத்திருப்பதாகவும் அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

viswasam tops on chart
Author
Chennai, First Published Dec 30, 2018, 9:38 AM IST


‘பேட்ட’ பட ட்ரெயிலர் ஒரே நாளில் ஒரு கோடிப்பேர் பார்க்கப்பட்ட சாதனை நிகழ்ந்த நிலையில் இன்று மதியம் கொலவெறி மாஸாக ‘விஸ்வாசம்’ ட்ரெயிலர் வெளியிடப்படும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் அது பேட்டயை விட பல மடங்கு சாதனைகளைப் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.viswasam tops on chart

இதற்காகவே அஜீத் ரசிகர்கள் கொத்துக்கொத்தாக ரூம் போட்டு வெயிட்டிங்கில் இருப்பதாகவும் ‘பேட்ட’ படம் 24 மணி நேரத்தில் சாதித்ததை தாங்கள் 12 மணி நேரத்தில் சாதிக்க சபதம் எடுத்திருப்பதாகவும் அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.viswasam tops on chart

இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரெண்டிங் படங்களின் வரிசையில் நேற்று முதலிடத்தில் இருந்த ‘பேட்ட’ மற்றும் சில இந்திப்படங்களை அடித்து நொறுக்கி முதலிடத்தை அடைந்திருக்கிறது அஜீத்தின் ‘விஸ்வாசம்’.

Follow Us:
Download App:
  • android
  • ios