தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பொதுவாக, பெரிய நடிகர்கள் படங்கள் வெளியானால் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். 

அந்த வகையில் வரும் 10 ஆம் தேதி அன்று, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள, 'விஸ்வாசம்' ,மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களுமே உலகம் முழுவதும் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அஜித் மற்றும் ரஜினி ஆகியோரின் ரசிகர்கள் இந்த வருட பொங்கலை இரட்டை பொங்கலாக கொண்டாட காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், தெலுங்கில் வெளியாக இருந்த விஸ்வாசம், திரைப்படத்தை ஜனவரி 26 தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர்.

இதுவரை தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அஜித் திரைப்படங்கள்,  வியாபார ரீதியிலும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரப்பரப்பை பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு ஓடும்.   

இருப்பினும் அவருடைய 'விஸ்வாசம்' படத்தை தமிழில் வெளியாகும் நாளிலேயே தெலுங்கில் வெளியிட முயற்சி செய்தார்கள் படக்குழுவினர். 

இந்நிலையில் ஏற்கெனவே, தெலுங்கில் மூன்று நேரடித் தெலுங்குப் படங்களும், 'பேட்ட' தெலுங்கு டப்பிங் படமும் தியேட்டர்களை ஆக்கிரமித்துவிட்டன. அதனால், 'விஸ்வாசம்' படத்திற்கு தியேட்டர்களே கிடைக்கவில்லையாம்.

எனவே, படத்தை ஜனவரி 26ம் தேதி தெலுங்கில் வெளியிட தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளார்களாம்.